பதிவு:2024-08-01 12:20:32
திருவள்ளூரில் டி என் பி எஸ் சி குரூப் 2 பயிற்சி வகுப்புகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார் :
திருவள்ளூர் ஆக 01 : திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்று வரும் டி என் பி எஸ் சி குரூப் 2 பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்து பயிற்சி வகுப்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் ஆகியோர் தலைமையில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன்,மண்டல இணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) ஆர்.பிரபாகரன் முன்னிலையில் மாணவர்களுடன் கலந்துரையாடி, தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறரர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி -1 , 2 , 4 ஆகிய தேர்வு, ஒன்றிய அரசின் தேர்வுகளான ஸ்டாப் செலக்சன் கமிஷன் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு எம் எல் சி போன்ற ஒன்றிய அரசின் வேலைக்கான பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன. தொழிற்படிப்புகள் படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலையை மாற்றி கலை மற்றும் அறிவியல் கல்லூரி குரூப் படித்தவர்கள் இந்த பயிற்சியின் மூலம் பெருமளவில் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
ஒன்றிய அரசின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தமிழ்நாட்டில் 14 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற தகவலை தெரிவித்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஆகவே இந்த பயிற்சி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கடின உழைப்புடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.உங்கள் முயற்சியை நான் கைவிடாதீர்கள். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் தேர்வில் வெற்றி பெற்று நீங்கள் விரும்பும் வேலையை பெறுவீர்கள் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
முன்னதாக பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழ் இலவச பாடத்தொகுப்பு கையேட்டினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர்கள் விஜயா, ரவிந்திரன், (மாவட்ட திறன் பயிற்சி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.