பதிவு:2024-08-01 12:22:31
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் ஆக 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் குறித்தும் அதன் பயனாளிகளின் தேர்வு குறித்தும் ஊரக பகுதிகளில் புனரமைக்கப்படும் வீடுகளில் எண்ணிக்கை குறித்தும், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வரும் தற்போது நிலைகள் குறித்தும், 2 ஆம் கட்டமாக இலங்கைத் தமிழர்கள் வீடு கட்டப்பட்டும் பணிகளின் தற்போது நிலை குறித்தும், பிரதம மந்திரி வீடு கட்டு திட்ட பணிகள் குறித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளில் எண்ணிக்கை மற்றும் புனரமைக்கப்பட்டு வரும் வீடுகளில் தற்போதைய நிலைகள் குறித்தும், பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் வீடு கட்டப்பட்டு வரும் வீடுகளில் எண்ணிக்கை மற்றும் தற்போதைய நிலைகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II (2023-2024) மற்றும் (2024-2025) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது .
மேலும், கலைஞரின் கனவு இல்லம் , பழங்குடியினர் வீடு கட்டுவதற்கான பயனளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை விரைவில் வழங்கி பயனாளிகள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II (2023-2024) கீழ் விடுபட்ட சிமெண்ட் சாலை , பேவர் பிளாக் சாலை பணிகளை 16 .8 2024-க்குள் முடித்து விட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில் குமார்,ஊராட்சிகள் உதவி இயக்குனர் பரணி, உதவி திட்ட அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.