திருவள்ளூரில் கூட்டுறவு செயல் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் ரூ 89.86 லட்சம் பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவிக்கான கசோலைகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

பதிவு:2024-08-01 12:24:36

திருவள்ளூர் ஆக 01 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு செயல் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பொருளாதார மேம்பாட்டுக் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் 8 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த அங்கத்தினர்களுக்கு ரூ.83.86 லட்சம், 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ 1.00 லட்சம், கைம்பெண்கள் கடன் ரூ.50 லட்சம், பண்ணைச் சாராக் கடன் ரூ.50 லட்சம் உழைக்கும் மகளிர் கடன் ரூ 2 லட்சம் மகளிர் தொழில் முனைவோர் கடன் 3 நபர்களுக்கு ரூ 1.50 லட்சம் மற்றும் MSME கடன் 1 நபருக்கு ரூ.50 லட்சம் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ 89.86 லட்சம் பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவிக்கான கசோலையினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான ஆ.க.சிவமலர், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, துணைப்பதிவாளர், பொவிதி ஆர்.இரவி, திருவள்ளூர் சரகம் துணைப்பதிவாளர் வே.சீனிவாசன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் தே.சிக்குமார் மற்றும் வங்கி அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.