பதிவு:2024-08-01 12:27:19
அரண்வாயல் பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம் - 2024 அறிமுக விழா : கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அறிவியல் விஞ்ஞானி ஏ.ராஜராஜன் பங்கேற்பு :
திருவள்ளூர் ஆக 01 : திருவள்ளூர் அடுத்த அரண்வாயலில் உள்ள பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் சதீஷ் தவான் விண்வெளி மையம் மற்றும் பிரதியுஷா பொறியியல் கல்லூரி இணைந்து தேசிய விண்வெளி தினத்தை (2024) கொண்டாடியது.இந்த நிகழ்ச்சிக்கு பிரதியுஷா கல்லூரி தலைவர் பி.ராஜாராவ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பி. சரண் தேஜா, முதன்மை நிர்வாக அலுவலர் ஸ்ரீமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரத்யுஷா. சென்னை தலைவர் சாந்தி யின் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். ஜே. ராதாகிருஷ்ணன், அறிவியல் விஞ்ஞானி ஸ்ரீஹரிகோட்டா இயக்குனர் ராஜராஜன் மற்றும் துணை இயக்குனர் ஜி. ரமேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 3,000 மாணவர்கள், பிரத்யுஷா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இதில் அறிவியல் திட்டங்கள், செயல்திட்ட விளக்கங்கள், நிலவின் கட்ட மாதிரிகள், ஏவுகணை முன்மாதிரிகள் மற்றும் விண்வெளி வினாடி வினாக்கள் ஆகியவை மாணவர்களின் குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்த உதவியது.இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீஹரிகோட்டா விஞ்ஞானி ஏ. ராஜராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, விண்வெளி தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பிரத்யுஷா பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் பி.சரண் தேஜா சிறப்புரையாற்றினார். அப்போது, புதிய பரந்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள மாணவர்களை ஊக்குவித்தார்.அதனைத் தொடர்ந்து ஸ்ரீஹரி கோட்டா இயக்குனர் ஏ . ராஜராஜன் பேசும்போது, இன்றைய வாழ்க்கையுடன் செயற்கைக்கோளின் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
தேசிய விண்வெளி நாள் விழாவில் பேசிய உணவுக் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய விண்வெளி நாள் என்பது விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்குமானது என்றார். அதுமட்டுமின்றி முதன் முதலில் ஆரியபட்டாவையும் எஸ்எஸ்எல்வி யையும் விண்ணில் ஏவிய போது இந்தியர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அத்துடன், "அவர்கள் தொடங்கி வைத்த அந்த ஆரம்பக் கால விண்வெளி ஆராய்ச்சி தான் இன்று நாம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்க காரணம். அப்துல் கலாம் உட்பட பல முக்கிய விஞ்ஞானிகள் இந்த பணியை செய்துவிட்டு சென்றுள்ளனர். ஒரு ஏவுகணையை விண்ணில் செலுத்தும் போது கடைசி நிமிடம் வரையில் ஏராளமான பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள், கடைசி நிமிடத்தில் ஏவுகணையின் வேகம் அதிகரித்து விட்டால் கூட அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் நுணுக்கமாக பணி புரிகின்றார்கள். அவர்களது பணியை போற்றும் வகையில் தான் இந்த தேசிய விண்வெளி நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன், "ஆகஸ்ட் 23 ம் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் இது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த கல்லூரியிலும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சி மூலம் விண்வெளியால் என்னென்ன நன்மைகளை நாம் அடைகிறோம், நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு விண்வெளி எப்படி பயன்படுகிறது, விண்வெளி ஆராய்ச்சிகளை எப்படி படிப்பது உள்ளிட்ட தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். 2047 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மட்டுமின்றி நமது அனைவரது கனவாக இருக்கின்றது. இதற்காகத்தான் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன" என்று தெரிவித்தார்.