தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தின நிறைவு நாள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் விண்வெளி செயல்பாடுகள் குறித்து கருத்துரை :

பதிவு:2024-08-05 13:00:45



தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தின நிறைவு நாள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் விண்வெளி செயல்பாடுகள் குறித்து கருத்துரை :

தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தின நிறைவு நாள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் விண்வெளி செயல்பாடுகள் குறித்து கருத்துரை :

திருவள்ளூர் ஆக 02 : திருவள்ளூர் மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம்-2024 நிறைவு நாளில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் விண்வெளி செயல்பாடுகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு கருத்துரைகள் வழங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிகழ்ச்சி நடக்கிறதுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மனிதர்கள் நினைத்துக் கூட பார்க்காத அந்த நிலாவில் கால் தடத்தை பாதித்துள்ளார்கள் அந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது.ஆகவே தான் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாடுகிறோம் அதுமட்டுமல்ல நாம் இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் ஏனென்றால் இஸ்ரோ மட்டுமே நிலவில் தனது கால் தடத்தை பதித்து இருக்கிறது வேறு எந்த நாடும் இதை செய்ததில்லை இந்த சாதனை ஒரு நல்ல நிர்வாகம் இல்லை என்றால் அது நடக்காது அதுக்காக தான் நாம் இஸ்ரோவிற்கு நன்றி சொல்ல வேண்டும் இஸ்ரோவில் மட்டுமே அதிக அளவு பெண்கள் பணிபுரிகிறார்கள் உலகிலேயே எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு பெண்கள் பணி புரியவில்லை என்பதை இந்த தருணத்தில் கூறிக் கொள்கிறேன். மிக்ஜாம் புயல் வந்தது அதை முன்கூட்டியே இஸ்ரோ தகவல் தெரிவித்ததன் காரணமாக 25,000 மேற்பட்ட பொதுமக்களை எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல் காப்பாற்ற முடிந்தது.விண்வெளியைப் பற்றி அதிக அளவில் படிக்க படிக்க நமக்கு அது குறித்த அறிவு வளரும் என்றும் சொல்கிறார்.

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளைப் போலும் நம் நாடும் அதிக அளவிலான செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளோம் அதன் காரணமாகவே உலகம் முழுவதும் ஒன்று இணைந்து உள்ளது அதனால் இந்த தேசிய அறிவியல் தினத்தை முக்கியமாக கொண்டாட வேண்டும் இந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற விண்வெளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியினை மாணவ மாணவியர்களுக்கு அதிக அளவில் இருந்தது ஆனால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை உங்களைப் போல் நான் மாணவனாக இருக்கும்போது இது போன்ற அதிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறேன்.

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நீங்கள் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் ஏனென்றால் இஸ்ரோவின் வெற்றி சதவீதம் 95% ஆக உள்ளது இது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கூட இந்த வெற்றி சதவீதத்தை எட்டவில்லை. அதேபோல் நீங்களும் இஸ்ரோ போல் பெருசாக திட்டமிட வேண்டும் வானத்தைத் தொட நினைக்க வேண்டும் அதை தொட்டும் பார்க்க வேண்டும் முதன் முதலில் இந்தியாவிலிருந்து நிலவிற்கு சென்றவர் திரு.ராகேஷ் சர்மா அவர்கள் அவரைப் பார்த்து அப்போதைய ஜனாதிபதி அவர்கள் இந்தியா எப்படி இருந்தது என்று கேட்டதற்கு ஜாரே ஜகாஜ அச்சா என்று சொன்னார் (ஜாரே என்பது உலகிலேயே இஸ்ரோ மிக பெரியது) ஆகவே மாணவர்கள் ஆகிய நிங்கள் இஸ்ரோ போல் பெருசாக திட்டமிட வேண்டும் வானத்தைத் தொட நினைக்க வேண்டும் அதை தொட்டும் பார்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.

பின்னர் விண்வெளி செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற கண்காட்சி மற்றும் quiz போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய விண்வெளி தினம் 2024 முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி, விண்வெளி தொடர்பான செய்திகளை கொண்டு அமைக்கப்பட்ட பேருந்தினை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டார்கள்.

இதில் அசோசியேட் இயக்குநர், SDSC SHAR, ஸ்ரீஹரிகோட்டா சையது ஹமித், துணை இயக்குனர் ரகுராம் பிரதீஷா பொறியியல் கல்லூரியில் துணைத் தலைவர் சரண் தேஜா, கல்லூரி முதல்வர் குமார், சென்னை சப் கமிட்டி NSD தலைவர் சாந்தி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.