பூண்டி அடுத்த சென்றான் பாளையம் ஊராட்சியில் வகுப்பறையில் வகுப்பெடுத்த ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு :

பதிவு:2024-08-05 13:07:30

பூண்டி அடுத்த சென்றான் பாளையம் ஊராட்சியில் வகுப்பறையில் வகுப்பெடுத்த ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு :

பூண்டி அடுத்த சென்றான் பாளையம் ஊராட்சியில் வகுப்பறையில் வகுப்பெடுத்த ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு :

திருவள்ளூர் ஆக 02 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்றான்பாளையம் ஊராட்சியில் டிஇஎல்சி தமிழ் சுவிசேஷ லூத்திரன் திருச்சபை தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் இ.சசிகுமார் (எ) ஜெயசெல்வன் (50).இந்த நிலையில் நேற்று 1-ஆம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.