பதிவு:2024-08-05 13:16:29
திருவள்ளூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சியினர் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு :
திருவள்ளூர் ஆக 03 : திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நகராட்சிக்கு உட்பட்ட சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் இதனால் சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.
இந்தநிலையில் திருவள்ளூரில் இருந்து பெரியகுப்பம், ஆயில்மில் வரையிலான சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானவர்கள் தள்ளுவண்டிகள் மூலம் பழக்கடைகள், உணவு கடைகள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்த திருவள்ளூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு உத்தரவின் பெயரில் திருவள்ளூர் நகரமைப்பு ஆய்வாளர் விஜயா, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அதிரடியாக அகற்றினர்.பெண் அதிகாரியாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றியதால் திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.