கைவண்டுர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் முறையான ஏற்பாடுகள் இல்லாததால் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் மனுக்களை பெற முடியாத நிலை ஏற்பட்டது :

பதிவு:2024-08-05 13:19:00

திருவள்ளூர் ஆக 03 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கைவண்டூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கைவண்டூர், திருப்பாச்சூர், பாண்டூர், நெமிலி அகரம், பட்டரைப் பெரும்பதூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே 12 துறைகளின் கீழ் 43 சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது மேலும் கூடுதலாக மருத்துவ மற்றும் குடும்ப நலம், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை பால்வளம் மற்றும் மீன்வளத் துறை என 15 துறையின் கீழ் 50 சேவைகளுக்காக மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பூண்டி ஒன்றியம் கைவண்டூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டும், தகுதியான மகளிர்க்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டமான மகளிர் உரிமைத்தொகை கேட்டும் அதிக அளவில் பெண்கள் குவிந்தனர்.

இதனால் இந்த இரண்டு துறைகளில் மட்டுமே கூட்டம் அதிகமாக காணப்பட்டு அதற்கான மனுக்களை பெற முடியாத சூழ்நிலையே ஏற்பட்டது. மற்ற துறைகளில் மனுக்களை பெற வந்த ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தது வேடிக்கையாக இருந்தது. போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால், இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் என்ற பெயரில் மக்களை அலைக்கழிப்பதை விட முறையாக பொது மக்களின் கோரிக்கை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.