பதிவு:2024-08-05 13:20:19
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருது : மாவட்ட ஆட்சியர் த,பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 03 : தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்க உத்தேசித்துள்ளது.தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்,சிறந்த பயண பங்குதார,சிறந்த விமான பங்குதாரர்,சிறந்த உணவகங்கள்,சிறந்த தங்கும் விடுதிகள்,சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள்,சிறந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள்,சிறந்த சுற்றுலா மேம்பாடு பிரச்சார சாதனங்கள்,சுற்றுலா மற்றும் விருந்தோம்பலை கற்பிக்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள், தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரதாரர்,சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தள ஆபரேட்டர்,சிறந்த முக்கிய சுற்றுலா ஆபரேட்டர்,சிறந்த சமூக ஊடகம் செல்வாக்குடையவர் 14. சிறந்த உள்நாட்டு பயண ஏற்பாட்டாளர் போன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக 20.08.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட சுற்றுலா அலுவலரை நேரிலோ அல்லது அலைபேசி (7397715675) மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த,பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.