பதிவு:2024-08-05 13:23:39
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு :
திருவள்ளூர் ஆக 05 : திருவள்ளூரில் அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில். இந்த கோவில் குளத்தில் நீராடி வைத்திய வீரராகவப் பெருமாளை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும். செய்த பாவங்கள் தொலையும். செல்வமகள் சேரும் என்பது ஐதீகம். மேலும் அமாவாசை தினத்தில் இறந்தவர்களுக்கு பிடித்த காரியங்கள் செய்து திதி கொடுத்து நீராடுவதால் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையும். அதனால் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
அதிலும் ஆடி அமாவாசை என்பதால் திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வீரராகவரை வழிபட்டு திருக்குளத்தில் நீராடியும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.