பதிவு:2024-08-05 13:25:40
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூலகம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி :
திருவள்ளூர் ஆக 05 : நூலகம் என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும். மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம்.அப்படிப்பட்ட நூலகம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்பவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும். அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இடைவேளை நேரத்தில் வீணாக பேசி பொழுது கழிப்பதை விட நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை வாசித்தால் நன்றாக இருக்கும். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியை கண்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூரிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக புத்தகத்தை ஒன்று படிக்க வேண்டும் என்ற ஒரு ஆவல் அவரிடம் உள்ளது. எனவே புத்தகங்களை படிக்க நூலகம் திறக்கப்பட உள்ளது. கோயில் இல்லாத ஊர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நூலகம் இல்லாத கிராமமே இருக்கக் கூடாது என்பது முன்னோர்கள் சொன்னது.
எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ள இந்த நூலகத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள், மாணவச் செல்வங்கள் தங்களுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள பேரு உதவியாக இந்த நூலகம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே மாவட்ட ஆட்சியரின் இந்த சீறிய முயற்சியால் புதிதாக திறக்கப்பட உள்ள நூலகத்திற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.