கடம்பத்தூரில் ரயில்வே ஊழியரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவு :

பதிவு:2024-08-05 13:27:46

திருவள்ளூர் ஆக 05 : திருவள்ளுர் அடுத்த கடம்பத்துர் வெண்மனம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் தினேஷ்.(28). ரயில்வே ஊழியரான தினேஷ் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி வீட்டருகே உள்ள அம்மன் கோயில் முன்பு தனியாக அமர்ந்திருந்த போது அங்கே வந்த கசவநல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் கமலேஷ் (22), பாலா மகன் கனிஷ்கர் (22) ஆகியோர் தினேஷின் தலை, கை, காலில் சரமாரியாக வெட்டினர்.

இதனையறிந்த தினேஷின் சகோதரி சங்கீதாவையும் தரக்குறைவாக பேசியதுடன், உன்னையும் வெட்டி கொலை செய்துவிடுவேன் என வெட்ட முயன்ற போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்ததால் கமலேஷ் மற்றும் கனிஷ்கர் ஆகிய இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷை, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், விசுவநாதன் ஆகியோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தினேஷின் சகோதரி சிவகாமி கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் டிஎஸ்பி அழகேசன் அறிவுறுத்தலின் பெயரில் கமலேஷ், மற்றும் கனிஷ்கர் ஆகிய இருவரையும் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கமலேஷ் மற்றும் கனிஷ்கர் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.