திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2.69 இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

பதிவு:2024-08-06 12:55:19

திருவள்ளூர் ஆக 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 456 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 124 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 54 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 49 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 92 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 137 மனுக்களும் என மொத்தம் 456 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 2,69300 மதிப்பில் நவீன செயற்கை அவையங்களை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் தனித் துணை ஆட்சியர் (சபாதி) வி.கணேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மற்றும் பல்வேறு சார்ந்த உயர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.