பதிவு:2024-08-06 12:57:51
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை பண்பாட்டு துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.1500 மதிப்பீட்டிலான ரூ 9000 மதிப்பீட்டில் மூக்குக் கண்ணாடியும், 2 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.5000 மதிப்பீட்டிலான ரூ 10000- க்கான திருமண நிதி உதவியும், 9 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.1500 மதிப்பீட்டிலான ரூ.12500- க்கான கல்வி நிதி உதவியும், 2 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.25000 மதிப்பீட்டிலான ரூ 50000- க்கான இயற்கை மரணம் நிதி உதவியும் ஆக மொத்தம் 19 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.81500 - க்கான மதிப்பீட்டில் காசோலை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கினார்.இதில் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு துறை நீலமேகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.