பதிவு:2024-08-06 13:05:27
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 06 : மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் கல்விக்கான அதிகாரமளித்தல் (சீர்மரபினர்களுக்கு மத்திய, மாநிலஅரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளித்தல்),சுகாதாரம் (சீர்மரபினர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல்),வாழ்வாதாரங்களை எளிதாக்குதல் சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல்)நிலம் மற்றும் வீடு (சீர்மரபினர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல்)
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்றமுகவரியில்விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.