பதிவு:2024-08-10 14:08:14
திருமழிசையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஜெ. ராதாகிருஷ்ணன் உணவுப் பொருட்களில் தரங்கள் குறித்து ஆய்வு :
திருவள்ளூர் ஆக 07 : திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஜெ. ராதாகிருஷ்ணன் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்களில் தரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் சர்க்கரை, அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் எடை சரியான அளவு இருப்பதே உறுதி செய்திட வேண்டும். மாதந்தோறும் உணவுப்பொருட்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும். நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் செல்வதை உறுதி செய்திட வேண்டும்.
தொடர்ந்து சம்பத் நகர் பகுதியில் உள்ள ஈக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் கூட்டுறவு நியாய விலை கடையில் பொருட்களின் தரம், அதன் அளவு விரல் ரேகை பதிவேடு விரல் ரேகை பதிவு செய்யாத நபர்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு பதிவேடு ஆகியவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்களை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் அவர்களுக்கான பொருட்களை வழங்க வேண்டும். பின்னர் ஆர்.கே பேட்டை பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப உணவு பொருள் கிடங்கினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஜெ. ராதாகிருஷ்ணன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கௌசல்யா, துணைப் பதிவாளர் (பொது வினியோகம்) ரவி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.