திருமழிசை பேரூராட்சி தலைவர் விபத்தில் உயிரிழந்ததால் புதிய தலைவர் பதவிக்கு தேர்தல் : திமுக சார்பில் மகாதேவன் மட்டும் போட்டியிட்ட போட்டியின்றி தேர்வு : முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நேரில் வாழ்த்து :

பதிவு:2024-08-10 14:14:27

திருவள்ளூர் ஆக 07 : திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என, ஆறு வார்டுகளை அ.தி.மு.க.,வும், 3, 4, 5, 8, 10, 12 ஆகிய ஆறு வார்டுகளை தி.மு.க.,வும் கைப்பற்றின.இரண்டாவது வார்டை ம.தி.மு.க.,வும், ஒன்பதாவது வார்டை பா.ம.க.,வும், 11வது வார்டை சுயேட்சையும் கைப்பற்றினர்.

இதில், தி.மு.க., கூட்டணி ஏழு இடங்களையும், அ.தி.மு.க., ஆறு இடங்களையும் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிட்ட பா.ம.க., ஒரு வார்டையும், சுயேச்சையாக 11வது வார்டில் போட்டியிட்டவர் வெற்றி பெற்று பா.ஜ.,வில் இணைந்தார்.இதில், பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த வடிவேல் தலைவராகவும், மகாதேவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 12-ம் தேதி பேரூராட்சித் தலைவர் வடிவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மே 16-ஆம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உ.வடிவேல் உயிரிழந்தார் இதையடுத்து, துணை தலைவர் மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனால், தலைவர் பதவிக்கு தி.மு.க., - அ.தி.மு.க,வினரிடையே கடும் போட்டி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக சார்பில் துணைத் தலைவர் மகாதேவன் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஆனால் அதிமுக தேர்தலை புறக்கணித்ததால் திமுக சார்பில் போட்டியிட்ட மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக செயல் அலுவலர் அறிவித்தார்.

இதனையடுத்து பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மகாதேவனுக்கு முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு. நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சக கவுன்சிலர்களும் பேரூராட்சித் தலைவர் மகா தேவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.