வேப்பம்பட்டு ரயில்வே கேட்டுக் கிடையே இருசக்கர வாகனங்கள் செல்லும் வழியை ரயில்வே அதிகாரிகள் அடைத்ததால் 100 க்கும் மேற்பட்டோர் இரயில் மறியல் :

பதிவு:2024-08-10 14:16:45



வேப்பம்பட்டு ரயில்வே கேட்டுக் கிடையே இருசக்கர வாகனங்கள் செல்லும் வழியை ரயில்வே அதிகாரிகள் அடைத்ததால் 100 க்கும் மேற்பட்டோர் இரயில் மறியல் :

வேப்பம்பட்டு ரயில்வே கேட்டுக் கிடையே இருசக்கர வாகனங்கள் செல்லும் வழியை ரயில்வே அதிகாரிகள் அடைத்ததால் 100 க்கும் மேற்பட்டோர் இரயில் மறியல் :

திருவள்ளூர் ஆக 07 : திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் இருந்து பெருமாள் பட்டு மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதற்காக வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் செயல்பட்டு வருகிறது இந்த ரயில்வே கேட்டு இடையே இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு இடைவெளி இருந்த நிலையில் அவற்றை இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர் இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில் வரும்போது தண்டவாளத்தை கடப்பதால் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு கை கால்கள் முறிந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தது.

இதை அடுத்து ரயில்வே கேட்டிற்கு இடையே இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு இரண்டு பக்கங்களும் இருந்த வழியை ரயில்வே நிர்வாகம் அடைத்ததால் அவசர தேவைகளுக்காக செல்ல முடியவில்லை என நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கத்திலும் சென்னைக்கு செல்லும் மார்க்கத்திலும் இரண்டு வழித்தடங்களிலும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ரயில் மறியல் ஈடுபட்டனர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ரயில் மறியலால் ரயில் சேவையானது இரு பக்கங்களிலும் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறை மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்வே கேட் இடையே செல்லும் வழியை பயன்படுத்துவதால் விபத்துக்கள் நடப்பதாகவும் ஒரு சிலருக்கு கை கால்கள் துண்டிக்கப்பட்டு ஒரு சிலர்கள் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இதன் காரணமாகவே அந்த இடைவெளியை அடைத்ததாக கூறியும் பொதுமக்கள் ஏற்காததால் தொடர்ந்து இரண்டு மணி நேரம் ரயில் மறியல் நடைபெற்றது.

இரயில்வே காவல்துறையினர் பொதுமக்களிடம் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் தொடர்ந்து ரயில் மறியல் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கான தீர்வை அதிகாரியுடன் பேசி எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது இதை அடுத்து ரயில் மறியல் கைவிடப்பட்டது இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கத்திலும் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்கத்திலும் இரண்டு வழித்தடங்களிலும் 2 மணி நேரம் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.