பதிவு:2024-08-10 14:26:31
திருவள்ளூரில் சுதந்திர தின திருநாள் முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் ஆக 08 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின திருநாள் முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
இந்தியத்திருநாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு கௌரவம் செய்யும் வகையில் அவர;களுக்கு பொன்னாடை அணிவித்து, சிறப்புசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விழா நடைபெறும் மைதானத்தை தூய்மைப்படுத்திடவும், விழா நாளில் வருகைதரும் அனைவருக்கும் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ளவும் திருவள்ளுர் நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அணிவகுப்பு மற்றும் கலை நிகழச்சிகளில் பங்குபெறும் மாணவ-மாணவிகளுக்கு உரிய சிற்றுண்டிகள் வழங்கப்படவேண்டும். விழா நடைபெறும் நாளில் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனத்தை மைதானத்திறக்கு அருகில் தயார்நிலையில் வைத்திடவும் உரிய மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுக்களும் 108 வாகனமும் இருக்கும் வகையில் சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோட்டக்கலைத்துறையினர் அலங்கார செடிகள் அமைக்க வேண்டும். நமது நாட்டின் சுதந்திர தின விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடிடும் வகையில் அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது), வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன் வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம், (திருவள்ளூர்) தீபா,(திருத்தணி) மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.