திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வருடாந்திர ஆய்வு கூட்டம் :

பதிவு:2024-08-10 14:28:34



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வருடாந்திர ஆய்வு கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வருடாந்திர ஆய்வு கூட்டம் :

திருவள்ளூர் ஆக 08 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வருடாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியானது மிகவும் பாரம்பரியமான வரலாற்று சிறப்புமிக்க இயக்கமாகும். இந்த இயக்கம் சமூக சேவையை சார்ந்த உன்னத நோக்கத்துடன் செயல்படும் இயக்கமாகும். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி எந்த ஒரு திட்டத்தினை எடுத்து செயல்படுத்தும் பொழுது அலுவலர்களுடன் உறுப்பினர்களும் இணைந்து ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த திட்டம் சிறப்பாக அமையும் எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியானது தற்பொழுது ஆற்றுகின்ற பணியை காட்டிலும் இன்னும் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருவள்ளூர் மாவட்ட கிளை ஆயுள் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள நான் உலக சமாதானத்திற்கும் நட்புறவிற்கும் பாடுபடுவேன் என்றும் சுகாதாரம் மேம்பட அனைத்து சேவைகளிலும் ஈடுபடுவேன் என்றும் ரெட் கிராஸ் அமைப்பின் அனைத்து அடிப்படைக் கொள்கைகளை மதித்து தேச நலனுக்காக பாடுபடுவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் நந்தகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் ஜான்சி பெரியநாயகி மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.