திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு , சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

பதிவு:2024-08-10 14:35:57



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு , சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு , சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு , சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட, ஆவடி ஆணையரக காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் போஸ்கோ வழக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை குறித்தும், தற்போதைய நிலைகள் குறித்தும், மேலும், குழந்தை திருமணங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எண்ணிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதி மற்றும் ஆவடி ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவுகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலைகள் குறித்தும், மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்தும், உணவு பாதுகாப்பாக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் இணைந்து கடைகளில் கூட்டாய்வு மேற்கொண்டு அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எண்ணிக்கை மற்றும் எத்தனை கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது தற்போதைய நிலைகள் குறித்தும், மேலும், போதைப் பொருட்களுக்கு பயன்படுத்திய வாகனங்களை கைப்பற்றப்பட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்று ஆய்வுக் கூட்டத்தில் சாலை விபத்து மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுநர் மீது வழக்கு தொடரப்பட்ட விபரங்களும், ஓட்டுநரின் உரிமத்தை இடைநீக்கம் செய்யப்பட்ட விவரங்கள் குறித்து, வாகனம் இயக்கும் பொழுது அலைபேசி பேசிக்கொண்டு செல்பவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் தலைக்கவசம் இல்லாமல் வாகன ஓட்டுநர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதைய நிலவரம் குறித்தும் , அதிக எடை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நிலவரங்கள் குறித்தும், மேலும் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒருவர் சாலை விபத்து ஏற்பட்டால் தொலைதூரம் உள்ள அரசு மருத்துவமனையை தவிர்த்து அருகில் உள்ள இன்னுயிர் காப்போம் திட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். என 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

தொடர்ந்து மாவட்ட நுகர்வோர் அமைப்பு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் ஈக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு எதிரில் பாண்டியன் மஹால் செல்லும் சந்திப்பில் வேகத்தடை அமைத்து தருவது குறித்தும், SH-50A நெடுஞ்சாலை இரு வழிச் சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதில் உள்ள குறைபாடுகள்- சாலையில் இரு பக்கத்திலும் கால்வாய் அமைக்கவும் மேலும் பாலாஜி நகர் முல்லை நகர் பகுதி விபத்து பகுதியாக உள்ளதால் வேகத்தடை அமைத்து தருவது குறித்தும், விவாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட என்.ஜி.ஓ சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தரமற்ற சாலைகளால் இருசக்கர வாகன விபத்து ஏற்படுகிறது.ஆட்டோக்கள் , பர்மிட்டுக்கு மிகுதியாக ஆட்களை ஏற்றுவதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுகிறது பிரதான சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்துக்கள் ஏற்பட உள்ளதால் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பராமரிக்கப்படாத வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வேகத்தடை இருக்கும் இடங்களில் சமிக்கை பலகைகள் அமைத்து தர வேண்டும். தாங்கள் வைத்த கோரிக்கைகள் பரிசீலினை செய்து கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

இதில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்) தீபா (திருத்தணி), மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.