திருவள்ளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி : உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார் :

பதிவு:2024-08-10 14:38:04



திருவள்ளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி : உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார் :

திருவள்ளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி  : உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு திருவள்ளூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மழைநீர் உயிர்நீர் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றார்கள்.

மேலும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி பராமரிக்க வேண்டும். கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள், நீராதார கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வீட்டுக் கூரையை மழைக்காலத்திற்கு முன் சுத்தம் செய்து, காய்ந்த இலைகளை அப்புறப்படுத்த வேண்டும்,

மழைநீர் சேமிப்பு தொட்டியில் பிளீச்சிங் பவுடர் சேமிக்கப்பட்ட மழைநீரில் கலக்க வேண்டும், மழைநீர் கொண்டு வரும் குழாய்களில் அடைப்புகளை நீக்கி பழுதுகளை சரிசெய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா தெரிவித்தார்.முன்னதாக குடிநீரின் தன்மையினை களநீர் பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டு களநீர் பரிசோதனைக்கு பயன்படும் உபகரணங்களை துறை அலுவலர்களுக்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) வழங்கினார்.

பின்னர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உள்ள மின்னணு விளம்பர வாகனத்தில் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பபட்டத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) பார்வையிட்டார்.

இதில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அ.அமலதீபன்,முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசுதா, உதவி பொறியாளர் ப.சம்பத்குமார் , வித்யா தொண்டு நிறுவனம் செயலாளர் சடகோபான் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.