பதிவு:2024-08-10 14:39:59
திருவள்ளூரில் சாலை விபத்துக்களை தடுக்க தனியார் அறக்கட்டளையின் ஆட்டோமேட்டிக் சிக்னல் அமைத்து காவல்துறை விழிப்புணர்வு :
திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகளவில் செயல்படுகின்றன. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருவள்ளூர் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால் சாலை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.
எனவே சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஆட்டோமேட்டிக் சிக்னல் அமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் டிஎஸ்பி அழகேசன் கலந்து கொண்டு ஆட்டோமேட்டிக் சிக்னலை பார்த்து வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்க வேண்டும் என டிஎஸ்பி கேட்டுக்கொண்டார்.
மேலும் மருத்துவ கல்லூரியிலிருந்து மணவாளநகர் வரை முக்கியமான 9 இடங்களில் ஆட்டோமேட்டிக் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தினை தவிர்க்க சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போக்குவரத்து காவலர்கள் தனியாக அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.