பேரம்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் முறையான ஏற்பாடுகள் இல்லாததால் ரெண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்த பொதுமக்கள் :

பதிவு:2024-08-10 14:42:22

திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நரசிங்கபுரம், பேரம்பாக்கம், இருளஞ்சேரி, குமாரசேரி, கூவம், சத்தரை, புதுமா விலங்கை, சிற்றம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே 12 துறைகளின் கீழ் 43 சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது 15 துறையின் கீழ் 50 சேவைகளுக்காக மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக மனுக்களைப் பெற்றனர். இதனால் மற்ற அதிகாரிகள் தூங்கிக் கொள்ளும் செல்போனை நோண்டிக் கொண்டும் இருந்தனர். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரனிடம் கொடுக்க, அவர் திமுக ஒன்றிய செயலாளரிடம் கொடுத்ததால் கோரிக்கை மனுக்களை கொடுத்த மக்கள் கோரிக்கை நிறைவேறுமா என்ற சந்தேகத்தில் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

துறைவாரியாக மனுக்களை பெறாமல் ஒட்டுமொத்தமாக வரிசையில் நிற்க வைத்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெண்கள் மூதாட்டிகள் காத்திருந்து மனுக்களை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை நடத்தியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.