பதிவு:2024-08-10 14:45:14
”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் படி ஆகஸ்டு –2024 மாதத்திற்கான கள ஆய்வு வருகிற 21-ஆம் தேதி பொன்னேரி வட்டம் தேர்வு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 09 : தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.
மேற்படி திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், பிரதி மாதம் ஒவ்வொரு மாதமும் (மூன்றாவது புதன் கிழமையன்று) ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
அதன் பேரில், ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் படி ஆகஸ்டு –2024 மாதத்திற்கான கள ஆய்வு 21.08.2024 அன்று பொன்னேரி வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.