திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மதி அங்காடி அமைக்க நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-08-10 14:48:31



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மதி அங்காடி அமைக்க நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மதி அங்காடி அமைக்க நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஆக 09 : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஆண்டு செயல் திட்டம் 2023-2024-ஆம் ஆண்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் அவர்களின் அறிக்கையில் 100 முக்கிய சுற்றுலாதலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி அங்காடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர்தேக்கம், பூண்டி ஒன்றியம், அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாச்சூர், பூண்டிஒன்றியம், லைட் அவுஸ் குப்பம் ஊராட்சி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய முக்கிய சுற்றுலாதலங்களில் மதி அங்காடி அமைத்திடவும், சம்மந்தபட்ட சுற்றுலாதலங்களில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ள ஊராட்சிகளிலிருந்து தகுதியான ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், துவங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்தும், வங்கி இணைப்புகடன் பெற்று பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையின் ஆர்வமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சுய உதவிக் குழுக்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் மாவட்ட அளவிலான குழு இறுதி செய்யும் குழுக்களுக்கு வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

மேற்காணும் விதிமுறைகளின் படி தகுதியான விண்ணப்பங்களை இணைஇயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 28.08.2024.அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 044-27664528 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.