புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் .

பதிவு:2024-08-10 14:54:51



முஸ்லீம் இல்லாதோரையும் வக்பு வாரியத்தில் பணியமர்த்த வேண்டும் என்ற திருத்தங்களை புரட்சி பாரதம் எதிர்க்கிறது எனவும், சிறுபான்மை நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்

புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் .

திருமழிசை ஆக 10- திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை M.ஜெகன் மூர்த்தி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார் .

ஆற்றிய உரையில், முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோற்றதற்கான காரணம் குறித்தும்,2026 தேர்தலுக்கான பூத் கமிட்டி குறித்தும்,கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் மூர்த்தி ஆகியோரது புகைபடங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு மக்கள் ய கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு 23% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை உச்சநீதி மன்றம் மறு பிரிசீலனை செய்ய வேண்டும், ரோஸ்டர் முறையை தமிழக அரசு துறைகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்,

தமிழகத்தில் தொடர்ந்து ஆணவ படுகொலைகள் நடப்பதை தடுக்க வேண்டும், புதிய அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு கண்டனம்.இலங்கை அரசை வன்மையாக கண்டித்தல், டெல்டா விவசாயத்திற்கும், குடிநீருக்கும், கர்நாடகாவையும், கேரளாவையும், ஆந்திராவையும் வலியுறுத்தல்.. மத்திய மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

வக்பு வாரிய சட்ட திருத்த்தம் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் திராவிட மாடல் ஆட்சியில் புத்தகத்தை தூக்கும் வயதில் அரிவாள் தூக்கும் கலாச்சாரம் பரவாமல் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மூர்த்தி, இயற்கை பேரிடரில் இறந்தவர்களுக்கு இரங்கல், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வக்பு வாரிய சொத்துக்களை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பராமரிக்க வேண்டும்,முஸ்லீம் இல்லாதோரையும் வக்பு வாரியத்தில் பணியமர்த்த வேண்டும் என்ற திருத்தங்களை புரட்சி பாரதம் எதிர்க்கிறது எனவும்,

சிறுபான்மை நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் பள்ளி மாணவர்கள் கைகளில் அரிவாள் தூக்கும் நிலையை அரசு, கல்வித்துறை மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்த ஜெகன் மூர்த்தி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆரம்பத்தில் சற்று சுனக்கமாக இருந்தாலும் புதிய ஆணையர் வந்த பிறகு வழக்கு வேகமெடுத்து வருகிறது எனவும், நல்ல நிலையில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு, அரசு முன் கூட்டியே அச்சுறுத்தல் இருக்கிறது என தெரிவித்திருக்க வேண்டும் அல்லது பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் எனவும், மீண்டும் இது போன்று செயல்கள் நடைபெறாதவண்ணம் மக்கள் பிரதிநிதிகள், கட்சி தலைவர்கள், தலீத் தலைவர்கள் பாதுகாப்பு அவசியம் எனவும் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் தலீத் தலைவர்களுக்கு பல சாதி தலைவர்களாலும், பல சாதி வெறியர்களாலும் மிரட்டப்படுவது இயற்கையாக இருக்கிறது. அவர்களுக்கு அரசு பாதுகாப்பு தருவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கூட்டணி குறித்த நிலைப்பாடு தெரிவிக்கப்படும் எனவும் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், முதன்மை செயலாளர் D.ருசேந்திர குமார், மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பூவை M.முகிலன், தொழுவூர் மாறன், தளபதி I.ஏழுமலை, பா.காமராஜ், முல்லை K.பலராமன், தளபதி செல்வம் R.சைமன் பாபு, பழஞ்சூர் B.வின்சென்ட், வழக்கறிஞர் KM.ஸ்ரீதர் மனவூர் G.மகா, தொழுவூர் ஆர.சரவணன் நயப்பாக்கம் D.மோகன், தொழுவூர் TK.சீனிவாசன் KS.ரகுநாதன், NP.முத்துராமன், கூடப்பாக்கம் E.குட்டி, பிரீஸ் G.பன்னீர், KN.குமார், சிவராமன், ராக்கெட் ரமேஷ், முகப்போர் கண்ணதாசன், P.தாமஸ்பர்னாபாஸ், பரணி P.மாரி, N. மதிவாசன், CP.குமார், சிவலிங்கம் DC.தியாகு, G.நிஜாமுதீன். மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.