பதிவு:2024-08-12 13:48:48
சென்னை ரவீந்திரபாரதி பள்ளியில் ஆக்ரிநோவா திருவிழா :
திருவள்ளூர் ஆக 10 : சென்னையில் அமைந்துள்ள ரவீந்திரபாரதி பள்ளியில் ஆக்ரிநோவா திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தங்கள் படைப்புகளை ஆர்வத்துடன் காட்சிப்படுத்தினர். ரவீந்திரபாரதி பள்ளிகளின் இயக்குநர் எம். ரேவந்த் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி டாக்டர் பசந்த குமார் ஜேனா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த விழாவில், ரவீந்திரபாரதி பள்ளியின் ஏ,ஜி.எம். முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தனது ஆதரவை வழங்கினார். ஆக்ரிநோவா திருவிழா, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மேடையாகவும் அமைந்தது.இந்த நிகழ்ச்சி திருவேற்காடு போரூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.