பதிவு:2024-08-12 13:51:16
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் கணவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி : ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை : 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை :
திருவள்ளூர் ஆக 10 : திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி செய்த வழக்கில் ஏழு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுரேஷ் (40). இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாக 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறி கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் திருவள்ளூர் கம்பர் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீடான புல்லரம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் சுரேஷ்-க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி புட்லூர் அம்மன் கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறதுஇதை அறிந்த சுரேஷின் மனைவி பார்வதி என்பவர், தனது கணவருடன் தகாத உறவில் உள்ள ராஜேஸ்வரி என்பவரை காய்கறி கடைக்கு வரக்கூடாது என தகராறு செய்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 4 மாதங்கள் கழித்து தற்போது நான் கடைக்கு வருவேன் என ராஜேஸ்வரி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷின் மனைவி பார்வதி என்பவர் ராஜேஸ்வரியின் கடைக்கு வந்து தகறாறு செய்து கொண்டிருந்தார். அப்போது பார்வதி தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ராஜேஸ்வரியின் மீது ஊற்றியுள்ளார்.அப்போது கடையில் ஏற்றி வைத்திருந்த விளக்கு எரிந்து கொண்டு இருந்த நிலையில் உடனே தீப் பற்றி ராஜேஸ்வரிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், முதல் கணவரை இழந்த நான் புல்லரம் பாக்கத்தில் உள்ள எனது தாய் வீட்டில் இருந்தபோது சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
சுரேஷின் முதல் மனைவி பார்வதி அவரைப் பிரிந்து இருந்ததால் தன்னை திருமணம் செய்து கொண்டு குமணன் சாவடியில் வசித்து வந்ததோம். நேற்று என் கணவர் சுரேஷ் கடைக்கு வரும்படி அழைத்ததால் வந்தேன். நான் கடையில் இருப்பது குறித்து தம்பி மற்றும் அவரது உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் பார்வதி கடைக்கு வந்து பெட்ரோல் ஊற்றி என்னை கொல்ல முயற்சி செய்தார். அவருக்கு உடந்தையாக அவரது உறவினர்கள் விஜயா (55), மோகன் (28), முரளி (34), நதியா (33) லட்சுமி (32) சங்கர் (40) குமார் (30) ஆகியோர் செயல்பட்டதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் 7 பேரையும் திருவள்ளூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.