நடிகை சித்ரா கணவர் தூண்டுதலால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் கணவர் ஹேம்நாத்தை விடுவித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு :

பதிவு:2024-08-12 13:54:05

திருவள்ளூர் ஆக 10 : சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த நிலையில் ஹேம்நாத் தான் தங்களது மகளைக் கொலை செய்ததாக சித்ராவின் பெற்றோர் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். மேலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்போதே சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டியதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் ஹேம்நாத் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும் இந்த வழக்கானது திருவள்ளூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 57 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஹேம்நாத் மீது காவல்துறை சார்பில் போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி ரேவதி உத்தரவிட்டார்.

கணவர் தூண்டுதலால் தான் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படாததால் இந்த வழக்கிலிருந்து ஹேம்நாத் விடுவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக சித்ரா தரப்பில் மேல்முறையீடு செய்தால் அதை சந்திக்கவும் தயாராக இருப்பதாக ஹேம்நாத்தின் வழக்கறிஞர் எஸ்.கே.ஆதாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.