திருவள்ளூர் அருகே நயப்பாக்கதில் பொற்காளியம்மன் திருகோவிலில் ஆடி திருவிழா

பதிவு:2024-08-12 13:56:30



பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவள்ளூர் அருகே நயப்பாக்கதில் பொற்காளியம்மன் திருகோவிலில் ஆடி திருவிழா

திருவள்ளூர் , ஆக.12- ஆடி மாதம் 4வது வாரத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பூவிருந்தவல்லி அடுத்த நயப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு பொற்காளியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து வந்தனர்.இதையடுத்து முக்கிய நிகழ்வான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.

குளத்தங்கரையில் இருந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி ஓம் சக்தி என்ற முழக்கத்துடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.இதில் 1000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.