தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திருத்தணி நகராட்சியில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் அறிவுச்சார் மையத்தினை திறந்து வைத்தார் : அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார் :

பதிவு:2024-08-13 14:39:09

திருவள்ளூர் ஆக 13 : தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நூலகம் மற்றும் அறிவுச்சார் மையத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்து கொண்டு அறிவுச்சார் மையத்தினை பார்வையிட்டார்.

முதலமைச்சரால் இன்று ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய நூலகம் மற்றும் அறிவுச்சார் மையத்தில் மாணவர்கள் கல்வி மற்றும் பொது அறிவினை வளர்த்து பயன்பெறும் வகையில் 10 கணினி இணையதள வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் அனைத்து விதமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன 60 நபர்கள் அமர்ந்து ஆய்வு கூட்டம் மற்றும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் அரங்குகள் உள்ளன. ஒரு குளிரூட்டபட்ட அறை போன்ற அனைத்து விதமான அடிப்படை வசதிகளோடு நவீன முறையில் இந்த அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க. தீபா, திருத்தணி நகராட்சி ஆணையர் அருள், திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.