தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியினை ஏற்றுக் கொள்ள மாணவர்களுடன் அமைச்சர் ஆர்.காந்தி ஏற்றுக் கொண்டார் :

பதிவு:2024-08-13 14:42:18



தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியினை ஏற்றுக் கொள்ள மாணவர்களுடன் அமைச்சர் ஆர்.காந்தி ஏற்றுக் கொண்டார் :

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியினை ஏற்றுக் கொள்ள  மாணவர்களுடன் அமைச்சர் ஆர்.காந்தி ஏற்றுக் கொண்டார் :

திருவள்ளூர் ஆக 13 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி டாக்டர். இராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன்,திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசபெருமாள் ஏற்றுக் கொண்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். என்ற போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை ஏற்றுக்கொள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி டாக்டர். இராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர்,அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், ஆசிரியர்கள் மற்றும் அரச அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க. தீபா, திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.