திருத்தணி நகராட்சி அமிர்தா புரம் மற்றும் பாப்பிரெட்டிப்பள்ளியில் தலா ரூ. 7 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டுறவு நியாய விலை கடை : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார் :

பதிவு:2024-08-13 14:44:53

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி உட்பட்ட அமிர்தா புரம் மற்றும் பாப்பிரெட்டிப்பள்ளியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலா ரூ. 7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கூட்டுறவு நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பொது விநியோக திட்டத்தினை துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி உட்பட்ட அமிர்தாபுரம் பகுதியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய முழு நேர கூட்டுறவு நியாய விலைக் கடையும், அதேபோல் பாப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர கூட்டுறவு நியாய விலைக் கடைக்கு கட்டப்பட்டுள்ளது இந்த புதிய கட்டடத்தினை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.