மாக் மாம்புரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் : அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு 85 பயனாளிகளுக்கு ரூ.25.36 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

பதிவு:2024-08-13 14:46:55



மாக் மாம்புரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் : அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு 85 பயனாளிகளுக்கு ரூ.25.36 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

மாக் மாம்புரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் : அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு 85 பயனாளிகளுக்கு ரூ.25.36 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக் மாம்புரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு திறந்து வைத்து பார்வையிட்டு 85 பயனாளிகளுக்கு ரூ.25,36,535 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் - 2 கட்டமாக ஜீலை -11 ஆம் தேதி துவக்கி வைத்தார்கள். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ‘’மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் 2 -ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 15.07.2024 முதல் 13.08.2024 வரை 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் மூன்று கட்டமாக 78 முகாம்கள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் மக்களுடன் முதல்வர் முகாம் ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக் மாம்புரம் ஊராட்சியில் இன்று சகஸ்ரபத்மாபுரம், சின்ன நாகபூண்டி, தேவாலம்பாபுரம், கோபாலபுரம், பெரியநாகபூண்டி, பெரியராமாபுரம், மாக் மாம்புரம், மைலார்வாடா, வெடியங்காடு, பைவலசா, திருநாதராஜபுரம் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் 1832 பல்வேறு கோரிக்கை மனுக்களாக அளித்துள்ளார்கள்.ஆகவே கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நடைபெற்ற நகர்ப்புற முகாம்களில் 12 துறைகளின் கீழ் 43 சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

தற்போது கூடுதலாக மருத்துவ மற்றும் குடும்ப நலம், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால் வளம் மற்றும் மீன்வளத்துறை ஆகிய மூன்று துறைகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சில துறைகளின் கீழ் 15 சேவைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது ஆக மொத்தம் 58 சேவைகளுக்கு முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் 30 நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை வேளாண் துறை ஊரக வளர்ச்சி ஆகிய துறையின் கீழ் பட்டா, வாரிசு சான்றிதழ், விதவைச் சான்று இயற்கை மரணம் உதவித்தொகை, விதவை உதவி தொகைக்கான ஆணை, குடும்ப அட்டை, வேளாண் இடுபொருட்கள், வேளாண் சான்று, சேதமடைந்த வீடுகளை புணரமைப்பதற்கான உதவித்தொகை என 85 பயனாளிகளுக்கு ரூ.25,36,535 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை .ஜெயக்குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரணி தனித் துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.