திருவள்ளூர் அருகே ஸ்ரீனிவாசா பர்னிச்சர் மெட்டல் மார்ட் கடையின் ஊழியரை வெளியே அழைத்து மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி வீடியோ வைரல் :

பதிவு:2024-08-13 14:50:28

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்களூர் ஆவடி பைபாஸ் சாலையில் சீனிவாசா பர்னிச்சர் அண்ட் மெட்டல் மார்ட் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நந்தகுமார் என்பவர் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி இரவு 7.30 அளவில் கடைக்குச் சென்ற மர்ம நபர்கள் குடிபோதையில் கடைக்குள் புகுந்த தகராறு செய்ததுடன் ஊழியர் நந்தகுமாரை வெளியில் அழைத்து ஒருமையில் பேசி சரமாரியாக தாக்கும் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்பொழுது திருவள்ளூர் முழுவதும் வைரலாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது .

கடையின் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு கடைக்கு வந்து ஊழியரை தகாத வார்த்தையால் பேசி பயங்கரமாக தாக்கும் வீடியோ வெளியான நிலையில் திருவள்ளூர் பகுதியில் பணியாற்றும் கடை ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் குடியிருப்பு பகுதிகள் அருகில் உள்ள காக்களூர் டாஸ்மாக் கடையையும் அங்கிருந்து அகற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.