திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது :

பதிவு:2024-08-13 14:55:10



திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது :

திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது :

திருவள்ளூர் ஆக 13 : ஆந்திராவிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிஎன் 12 பிடி 2985 என்ற சரக்கு லாரி திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்து. அதனை மடக்கி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் மூன்று பைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த மினி லாரியை பறிமுதல் செய்து மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த வாகனத்தில் 100 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த சரக்கு வாகனம் திருவள்ளூர் சென்னை வழியாக தூத்துக்குடிக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கடத்தலில் ஈடுபட்ட சுகுமார் மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து கலால் டிஎஸ்பி அனுமந்தன் விசாரணை நடத்தினார். ஆனால் குற்றவாளிகளை அடையாளம் காட்டவோ, எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்தோ செய்தியாளர்கள் பல முறை தொடர்பு கொண்டும் கண்டுக்காமல் தயக்கம் காட்டியது ஏன் என்பது மர்மமாக உள்ளது.