பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரிப் பருவத்தில் கடன் பெற்ற விவசாயிகள் காப்பீடு செய்ய வரும் 25 ம் தேதி வரை நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-08-13 14:59:06

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்டத்திற்கு சொர்ணவாரி நெல், காரீப் பருவ கம்பு, பச்சைபயறு, உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு கடன் பெற்ற விவசாயிகள் தாங்கள் கடன் பெற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 25 வரை காப்பீடு செய்வதற்கான கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆகஸ்ட் 25 க்குள் காப்பீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது சொர்ணவாரி நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.690, காரீப் பருவ பயிர்களான கம்பு ஏக்கருக்கு ரூ.218, பச்சை பயறு ஏக்கருக்கு ரூ.397, நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.616, உளுந்து ஏக்கருக்கு ரூ.397, காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மேற்குறிப்பிட்ட பயிர்களை காப்புpட செய்வதற்கு கடன் பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஃ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு முன்னதாகவே காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.