பதிவு:2024-08-13 15:36:12
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளை நூலகத்தில் நூலக தின விழா.
திருவள்ளூர் ஆகஸ்ட் 13 -
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் இயங்கி வரும் முழு நேர மாதிரிக் கிளை நூலகத்தில் நேற்று நூலக தின விழா நடைபெற்றது .
நடைபெற்ற நூலகர் தின விழாவில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் 100 பேருக்கு இலவசமாக நூலக வாசிப்பு உறுப்பினர் அட்டை வழங்கி நூலகத்தில் இணைத்துக் கொண்டனர்,
விழாவில் வாசகர் வட்டத் தலைவர் முனைவர் ச.ச.குமார் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். நூலகர் சண்முகத்துக்கு பயனாடை அணிவிக்கப் பட்டது. மேலும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்