பதிவு:2024-08-13 15:05:43
பூவை M.ஜெகன் மூர்த்தி MLA பரிசுகள் வழங்கினார்
திருமழிசை ஆக் 13-
திருமழிசை அடுத்த வெள்ளவேடு பகுதியில் மனிதநேய நாளை முன்னிட்டு, லவ் அண்ட் கேர் அமைப்பின் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் என 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போட்டியினை நகைச்சுவை நடிகர்கள், முல்லை, மற்றும் கோதண்டன் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
போட்டி முடிந்த பின்பு பரிசளிப்பு விழாவில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் கே வி குப்பம் எம்எல்ஏ M.ஜெகன் மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். அமைப்பின் தலைவர் டாக்டர் மேரி கனிஷ்டா, தலைமை தாங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் முல்லை, கோதண்டம், இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கதின் பொறுப்பாளர்கள் ஐயப்பன் டாக்டர் பாலகிருஷ்ணன் MP வேதா, கொற்றவை நாகராஜன் , ஜஸ்டின், குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.