திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞர் திருவுருவச் சிலை : அமைச்சர்கள் கே. என். நேரு,ஆர். காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர் :

பதிவு:2024-08-16 18:00:28



திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞர் திருவுருவச் சிலை : அமைச்சர்கள் கே. என். நேரு,ஆர். காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர் :

திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞர் திருவுருவச் சிலை : அமைச்சர்கள் கே. என். நேரு,ஆர். காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர் :

திருவள்ளூர் ஆக 14 : திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. இராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன்(திருத்தணி) , ஆவடி மாநகராட்சி ஆணையர் ச. கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது 490 நகராட்சிகள் பேரூராட்சிகள் 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உயர்த்தப்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மொத்தம் இலட்சம் பேர் பயனடைந்து இருக்கிறார்கள் இதற்கு டாக்டர்.கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் நம்முடைய முதலமைச்சர் ஆண்டுதோறும் நகராட்சி நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் 24 ஆயிரம் கோடி நகராட்சி துறைக்கு ஒதுக்கி தருகிறார்கள் நம் நகராட்சி நிர்வாகத்திற்காக முதலமைச்சர் 75 கோடியே 22 லட்சம் மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய பள்ளி கட்டடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள் நாள் முதலமைச்சர் அனுமதி பெற்று வழங்கப்படும் மேலும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ள நகராட்சி தேவையன பணிகளை நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து தான் சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பூண்டி, புழல், முழுமையாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆவடி மாநகராட்சி பொருத்தவரையில் மூன்று நான்கு வாரங்களில் முழுமையாக தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது மீதமுள்ள வார்டுகளில் கொடுப்பதற்கு கொஞ்சம் சிரமமாக உள்ளது பொன்னேரியில் நகராட்சி உப்பு தண்ணீர்தான் வந்து கொண்டிருக்கிறது சட்டமன்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார் அங்கிருக்கிற கடல் நீரை குடிநீராக வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டு ஊரக வளர்ச்சி துறையின் முலம் செயல்படுத்த உள்ளோம் திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலையினை திறந்து வைப்பதில் எனக்கு தகுதி இல்லை ஆனால் நான் ஒரு அடிமட்ட தொண்டன் என்பதால் இதை பாக்கியமாக கருதி திறந்து வைப்பதில் பெருமைபடுகிறேன் என நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.

பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கூடுதல் தீருதவியாக ஆறு நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணையினை அமைச்சர்கள் வழங்கினர்.தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 இலட்சம் மற்றும் கூடுதலாக 2 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பள்ளியின் கட்டடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் ஆவடி வட்டம் பருத்திப்பட்டு கிராமம் சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் 11.08.2024 அன்று கழிவுநீர் தொட்டியினை சுத்தம் செய்த போது கோபி என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மனைவி தீபா அவர்களுக்கு ரூ. 6 இலட்சம் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முதல் தவணைத் தொகைக்கான ஆணைகளையும் கூடுதல நிவாரணம் அரசு வேலையில் இளநிலை உதவியாளருக்கான ஆணைகளும் தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் என்பதன் அடிப்படையில் தாட்கோ மூலம் ரூ. 5 இலட்சத்திற்கான ஆணைகளை வழங்கினார்கள்

இதில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு, திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் அரசு அலுவலர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.