பதிவு:2024-08-16 18:03:26
நீரில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்தினர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலை : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீரில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்தினர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்வன் மோகன் என்பவர் 29.01.2022 அன்று கொசஸ்தலை ஆற்றில் இறந்ததை தொடர்ந்து அவரது தந்தை ரவி அவர்களிடமும், அதேபோல் ஊத்துக்கோட்டை பேரூராட்சி, கலைஞர் தெருவை சேர்ந்த செல்வன். ஷியாம் சுந்தர் என்பவர் 01.12.2021 அன்று அடித்துச் செல்லப்பட்டு மைக்காக அவருடைய தாயார் பத்மலதா அவர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார்.
இதில் தனித் துணை ஆட்சியர் (சபாதி) கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.