திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் :

பதிவு:2024-08-16 18:07:49



திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் :

திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் :

திருவள்ளூர் ஆக 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் பேரூராட்சி துறையினர்கள் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக கண்காணித்து பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் இருக்க உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் நடவடிக்கைகள் குறித்து முகாம்கள் அமைத்து டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு தோறும் சென்று காய்ச்சல் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு அதனை உறுதி செய்திட வேண்டும். வீட்டை சுற்றி இருக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படாத ஆட்டு உரல்கள் பழைய டயர்கள் ஆகியவைகளை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி மருத்துவர்கள் கூறுகின்ற ஆலோசனை பின்பற்றி சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச. கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியாராஜ் (திருவள்ளூர்), இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) மீரா, ஆவடி மாநகராட்சி நல அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பரணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.