திருவள்ளூர் அருகே கூடப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி விழா

பதிவு:2024-08-16 20:51:51



திருவள்ளூர் அருகே கூடப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி விழா

திருவள்ளூர் அருகே கூடப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி விழா

திருவள்ளூர் ஆக்16- திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடப்பாக்கத்தில் 78ஆம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி நல திட்ட விழா பூந்தமல்லி மேற்கு ஒன்றிய ஆதித்ராவிடர் அணி துணை அமைப்பாளர் எம்.சி.தீனா தலைமையில் நடைபெற்றது. .

இவ்விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவரும் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளருமான D..தேசிங்கு, பூந்தமல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி க.பரமேஸ்வரி கந்தன், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்த கொண்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

மேலும் மாணவர்களுக்கான நலத்திட்ட விழாவிற்கு திமுக கழகத்தின் பூந்தமல்லி ஒன்றிய. நகர, கிளை பொறுப்பாளர்கள் கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.