பதிவு:2024-08-16 18:42:25
திருவள்ளூர் மாவட்டத்தில் திட்டப்பணிகள், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சத்துணவு திட்டம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகியவற்றின் திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமுகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சமுகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை இயக்குநர் வே.அமுதவல்லி,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குநர் மெர்சி ரம்யா,குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. இராஜேந்திரன்(திருவள்ளூர்), டி,ஜெ,கோவிந்தராஜ்(கும்மிடிப்பூண்டி) ஆகியோர் மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் போதுமே பெண் திட்டப்பணிகள் குறித்தும், தமிழ் புதல்வன் திட்ட பணிகள் குறித்தும், திருமண நிதி உதவி திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் விவரங்கள் குறித்தும், திருநங்கைகளுக்கு சுயதொழில் துவங்கிட மானியத்தில் வழங்கும் திட்டப் பணிகள் குறித்தும், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட விபரங்கள் குறித்தும், மாவட்ட அளவிலான வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட்ட விபரங்கள் குறித்தும், சத்துணவு திட்ட பட்டியல்கள் சரி கட்டுதல் விவரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்பொழுது பேசிய அமைச்சர், சென்னையில் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ சேவை இந்த ஆண்டு தொடங்கப்படும்.சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களும் பிங்க் ஆட்டோ திட்டம் வரும்.பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை சட்டம் 2013 கீழ் மூலமாக 10 பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் பெண்கள் புகார் அளிக்க புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக 3.20 லட்சம் மணவர்கள் பயன் பெறும் வகையில் ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் 200 பேருக்கு அத்திட்டம் பெற வங்கி கணக்கு தொடங்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.காலை உணவு திட்டம் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் விரிவுபடுத்த முதல்வர் முடிவு செய்வார். துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் 19ஆம் தேதி வருவதை எதிர்பார்க்கலாம், அனைவரும் எதிர்பார்க்கின்றனர், உதயநிதி துணை முதல்வராவது தனிப்பட்ட திமுக எடுக்கும் முடிவு என தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கீர்த்தி மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் 11 நலிந்த பெண்களுக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.1,65,000 க்கான காசோலையினை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டத்தில் இம்மையம் செயல்பட 25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட மகளிர் அதிகார மையம் துவக்கம் மற்றும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் 2013 Poshicc.tn.gov.in 2013) முகப்பு செயலினை சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே,வி,ஜி,உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரிகுமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் வாசுகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலர் நிஷாந்தினி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.