பதிவு:2024-08-16 18:44:46
திருவள்ளூர் அருகே தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றிய இளம்பெண்ணை திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி குழந்தை பிறந்த நிலையில் விட்டுச் சென்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார் :
திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் அடுத்த கச்சூர் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றி வந்த ஸ்ருதி(21) என்ற இளம்பெண்ணை பள்ளியின் அருகில் பைக் ஷோரூம் நடத்தி வந்த பாஸ்கர் என்ற இளைஞர் காதலித்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.இதனையடுத்து ஸ்ருதி கர்ப்பம் அடைந்தததால் பாஸ்கரை திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி கேட்டு வந்த நிலையில் பாஸ்கர் குழந்தையை கலைத்து விடும்படி இளம் பெண் ஸ்ருதியை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனாலும் குழந்தையை கலைக்க மாட்டேன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாஸ்கரை வற்புறுத்தியதால் பாஸ்கருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளது தெரிய வந்தது,இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் தனி வீடு எடுத்து ஸ்ருதியை தங்க வைத்து கவனித்து வந்துள்ளார்.இந்த நிலையில் ஸ்ருதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் பாஸ்கர் சுருதியின் வீட்டிற்கு வருவதை தவிர்த்து வந்ததோடு குழந்தை எனக்கு பிறக்கவில்லை என பாஸ்கர் ஸ்ருதியிடம் அடிக்கடி சண்டை இட்டு பின்னர் வீட்டிற்கு வருவதை நிறுத்தி உள்ளார்.
டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டு பின்னர் அழைத்துச் செல்கிறேன் என அடித்து துன்புறுத்தி உள்ளார்.இதனால் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் கை குழந்தையுடன் சென்று புகார் அளித்த நிலையில் அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது,இதனால் கோபமடைந்த பாஸ்கர் ஸ்ருதியின் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
எனவே ஆசை வார்த்தை கூறி திருமணமானதை மறைத்து என்னுடன் உடலுறவு வைத்து குழந்தை பிறந்த நிலையில் குழந்தையையும் என்னையும் பராமரிக்காமல் நம்பிக்கை மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கும் பாஸ்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைக்கும் எனக்கும் மாவட்ட காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம் பெண் ஸ்ருதி குழந்தையுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.