பதிவு:2024-08-16 18:54:09
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே விற்பனைக்காக போதை மாத்திரை வைத்திருந்த 2 இளைஞர்கள் கைது :
திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா பான்பராக், கூல் லிப் ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்கள் ஃ கஞ்சா, கள்ளச்சாராயம் என அனைத்தும் சர்வ சாதாரணமாக தொடக்கத்தில் உள்ளது. ஆந்திர மாநில எல்லையோர பகுதியான திருவள்ளூருக்கு ரயில்கள் மூலமாகவும் பேருந்துகள் மூலமாகவும் ஆட்டு இருசக்கர வாகனம் மூலமாகவும் கஞ்சா போன்ற போதை பொருட்களை கடத்தி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மாவட்ட காவல்துறை சார்பில் வாகன சோதனை ரோந்து பணி நடைபெற்றாலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை பழக்கம் குறைந்த பாடில்லை.
இந்நிலையில் தற்போது கோதை மாத்திரைகள் போதை ஊசிகள் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகுப்பம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா மவுலிவாக்கம் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (22), அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பதும் தெரியவந்தது.திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் செல்லும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.இதனையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.