பதிவு:2024-08-16 18:56:13
திருவள்ளூரில் வீட்டு வாசல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவில் இன்ஜினியரின் இருசக்கர வாகனம் திருடிச் செல்லும் வீடியோ வைரல் :
திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனை,ரயில் நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களும் அதேபோல் ஆடைகள் வணிக வளாகங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களும் தொடர்ந்து திருடி செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் பத்தியால்பேட்டை மசூதி தெருவை சேர்ந்த முகமது அலி என்பவர் சென்னையில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
அவர் நேற்று இரவு வழக்கம் போல் பணி முடித்து வீட்டுக்கு வந்து வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் அதிகாலையில் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் . இதை அடுத்து வீட்டின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் அதிகாலை சுமார் மூன்றரை மணி அளவில் இளைஞர் ஒருவர் முதுகில் பை ஒன்றை மாட்டிக் கொண்டு அத்தெருவில் சுற்றித் திரிவதும் நான்கைந்து இரு சக்கர வாகனங்களை சோதனை செய்துவிட்டு பின்பு சென்று மீண்டும் வந்து முகமது அலிய் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து தள்ளிக் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருப்பதைக் கண்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இரு சக்கர வாகன கொள்ளையனை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் கொள்ளை போவது அதிகரித்து வருவதால் காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி இருசக்கர வாகன கொள்ளையர்களை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்த சிசிடிவி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.