78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உளுந்தை ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் :

பதிவு:2024-08-16 19:01:23

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உளுந்தை ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் :

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உளுந்தை ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் :

திருவள்ளூர் ஆக 16 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே. ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர் வசந்தா ஊராட்சி மன்ற செயலர் ஆர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வார்டு உறுப்பினர்கள் கோமதி காவேரி மேகவர்ணன் பத்மாவதி சொர்ணாம்பிகா மற்றும் மகரி சுய உதவி குழுவினர் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் ஒரு சிலர் இரண்டு நாட்களாக பட்டா வழங்காமல் இருப்பது குறித்து கேட்டபோது உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம நிர்வாக அலுவலர் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.