78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக வினர் கைகளிலும் வாகனங்களிலும் தேசியக்கொடி ஏந்தி பேரணி மற்றும் சாலை மறியல் :

பதிவு:2024-08-16 19:03:08

திருவள்ளூர் ஆக 16 : 78 வது சுதந்திர தினத்தை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜகவினர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி டில்லிபாபு ஏற்பாட்டில் மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன்.மாநில ஓபிசி அணி செயலாளர் ராஜ்குமார்.மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம். மாவட்ட செயலாளர் பாலாஜி. துணைத் தலைவர் சண்முகம். மாவட்டத் தலைவர் அஸ்வின் பட்டியல் இன மாவட்ட தலைவர் கராத்தே லட்சுமிகாந்த். நகரத் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கைகளிலும் வாகனங்களிலும் தேசியக் கொடிகளை ஏந்தி பேரணியாக ஆயில் மில் வரை வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து தேசிய கொடிகளை கழற்றி விட்டு செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியதால் பாஜகவினர் தங்கள் வாகனங்களில் இருந்து தேசியக்கொடிகளை அகற்ற முடியாது எனவும் தாங்கள் கட்சி கொடிகளை ஒன்றும் கட்டிச் செல்லவில்லை எனவும் காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயில் மில் நான்குமுனை சந்திப்பில் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை எடுத்து வாகனங்களில் தேசியக் கொடியோடு வெங்கத்தூர் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வந்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.